×

போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்ய அதிபர் புடினை சந்திக்க தயார்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதி

வாஷிங்டன்: உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை முடிவுக்குக் கொண்டு வர, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்திக்கத் தயார் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். வாஷிங்டன், மாஸ்கோ, உக்ரைன் மீதான ரஷியாவின் போர் நடவடிக்கை கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ராணுவ உதவிகளை வழங்கி வருகின்றன. கடந்த ஒன்பது மாதங்களாக போா்க்களத்தில் ரஷியாவை எதிா்த்து நிற்கிறது உக்ரைன். இந்த நிலையில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரனை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜோ பைடன், ‘‘உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான வழியை ரஷ்ய அதிபர் புடின் உண்மையிலேயே தேடுகிறார் என்றால், அவரை சந்திக்கவும் தயார்’’ என குறிப்பிட்டார். ஆனால்  புடின் அவ்வாறு தேடவில்லை என்றும் அவர் கூறினார். அதேநேரத்தில் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்காவும், பிரான்சும் தொடர்ந்து உக்ரைனை ஆதரிக்கும் என்றும் அவர்கள் உறுதி அளித்தனர்.  * மோடியை ஆதரிக்க காத்திருக்கிறேன்ஜி 20 தலைவர் பதவியை இந்தியா வியாழன் அன்று முறைப்படி ஏற்றுக்கொண்டது. இதுபற்றி அமெரிக்க அதிபர் பைடன் கூறும்போது,’ அமெரிக்காவின் வலுவான பங்காளி இந்தியா. ஜி 20 தலைவர் பதவியில் இருக்கும் எனது நண்பர் பிரதமர் மோடிக்கு ஆதரவளிக்க நான் எதிர்நோக்கி காத்திருக்கிறேன்’ என்றார்….

The post போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்ய அதிபர் புடினை சந்திக்க தயார்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதி appeared first on Dinakaran.

Tags : President Putin ,US President ,Joe Biden ,Washington ,President ,Vladimir Putin ,Russia ,Ukraine ,Joe Byden ,
× RELATED அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு ரூ7.50 லட்சம் அபராதம்